தேசியக்கொடி அவமதிப்பு : பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

தேசியக்கொடி அவமதிப்பு : பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வர் பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்தார். அதேபோல் திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதன் முறையாக தேசியக்கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சித் தலைவர் எல் .முருகன் கொடியேற்றினார்.

தேசியக்கொடி அவமதிப்பு : பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

இதுகுறித்து முகப்பேர் சேர்ந்த குகேஷ் என்பவர் எல். முருகன் தேசியக்கொடியை அவமதித்து விட்டதாக புகார் அளித்தார். அதில் காவி, பச்சை வண்ணம் பூசப்பட்ட பாஜகவின் கொடி கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி அவமதித்து விட்டதாக அவர் புகாரில் கூறியிருந்தார்.

தேசியக்கொடி அவமதிப்பு : பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில் கோவையில் தேசியக்கொடியை அவமதித்ததாக வெங்கடேஷ் உள்ளிட்ட பாஜகவினர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சரவணம்பட்டியில் பாஜக கொடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி அவமதிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.