ஹெல்மெட் போடாததால் ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீஸ் !

ஹெல்மெட் போடாததால் ஆட்டோ ஓட்டுநருக்கு  அபராதம் விதித்த போலீஸ் !

ஹெல்மெட் அணியாமல் சென்றதாக ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோ எண்ணை குறிப்பிட்டு போலீசார் அபராதம் விதித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹெல்மெட் போடாததால் ஆட்டோ ஓட்டுநருக்கு  அபராதம் விதித்த போலீஸ் !

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வாகரனுக்கு செல்போனில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் ஹெல்மெட் அணியாமல், உரிய ஆவணங்கள் இன்றி சென்றதாக குலசேகரம் போலீஸார் அவரது ஆட்டோ வாகன எண்ணைக் குறிப்பிட்டு ரூ.1600 அபராதம் செலுத்துமாறு குறிப்பிட்டிருந்தது. இதை கண்டு ஆட்டோ ஓட்டுநர் செல்வராகவன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஹெல்மெட் போடாததால் ஆட்டோ ஓட்டுநருக்கு  அபராதம் விதித்த போலீஸ் !

இதுகுறித்து கூறும் அவர் , கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வரும் எனக்கு இந்த அபராத தொகை அதிகம். நான் இதை செலுத்த போவதில்லை. என் பகுதியிலிருந்து 30 கிமீ அப்பால் நான்சென்றதாக கூறும் இந்த குளறுபடியை போலீசார் சரிசெய்ய வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குலசேகர காவல் நிலைய ஆய்வாளர் விமலா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் உள்ளேன் என்று கூறியுள்ளார்.