சென்னையில் மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் ரூ.2.10 கோடி அபராதம் வசூல்

 

சென்னையில் மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் ரூ.2.10 கோடி அபராதம் வசூல்

கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,438 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.ந்த வகையில் மதுரையில் முகக்கவசம் அணியாமல் சாலையில் வாகனங்களில் வந்தவர்கள், நடந்து சென்றவர்களிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் ரூ.2.10 கோடி அபராதம் வசூல்

அந்த வகையில் சென்னையில் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் சென்றதாக இதுவரை 42,087 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறி இருசக்கர வாகனத்தில் 2 பேர் சென்றதாக 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாஸ்க் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.2.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.