"பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டினான்" -போக்குவரத்து போலீசுக்கு பலமுறை தண்ணி காட்டினார் - வண்டி விலைக்கே fine கட்டவைத்த போலீஸ் ... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Main"பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டினான்" -போக்குவரத்து போலீசுக்கு பலமுறை தண்ணி காட்டினார் - வண்டி விலைக்கே fine கட்டவைத்த போலீஸ் ...

மாதிரி படம்
மாதிரி படம்

பெங்களூரில் போக்குவரத்து விதிகளை  71 முறைக்கு மேல்  ஸ்கூட்டரில் மீறியதாக ஒருவரை பிடித்து அவருக்கு 15400 ரூபாய் அபராதம் விதித்து, கிட்டத்தட்ட அவரின் வண்டி விலைக்கே fine கட்டவைத்த பிறகு போலீஸ்  ஸ்கூட்டரை விடுவித்தனர் .

traffic police

பெங்களுர் ,மஞ்சுநாத் பகுதியை சேர்ந்த ஒரு காய்கறி கடைகாரர் ,71 முறைக்குமேல் போக்குவரத்து விதிகளை மீறியது cctv கேமரா மூலம் போலீஸ் பதிவு செய்து அவருக்கு அவரின் உயரத்திற்கே 5.1 அடிக்கு சார்ஜ் ஷீட்டை போலீஸ் தயாரித்து, அவரை 15400 ரூபாய் அபராதம் கட்ட வைத்த பிறகு ,அவரின் ஸ்கூட்டரை விடுவித்தனர் .

manchunath

அவர் 55 முறை ஹெல்மெட் போடாமலும் ,11முறை சிக்னலை மீறியதாகவும் வழக்கு பதிவு செய்து 15400ரூபாய்  அபராதம் சனிக்கிழமை விதித்தோம். ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் வண்டியை பறிமுதல் செய்தோம் ,பிறகு அவர் அபராதத்தை கட்டி விட்டு வண்டியை மீட்டு  சென்றார் ,இதன் மூலம் யாரும் போக்குவரத்து விதி மீறலிலிருந்து தப்பிக்க முடியாது என போலிசார் தெரிவித்தனர் .
அபராதம் கட்டிய நபர் என் வழக்கு  அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும் என தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.