• April
    04
    Saturday

Main Area

Main



தவறே செய்யாத எங்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது: நீட் விவகாரத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு !

Madurai high court
Madurai high court

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுக்கடுக்காக குற்றங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதனால், மருத்துவக் கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களையும் சோதிக்கும் படி மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டது. இது வரை உதித் சூர்யா உட்பட 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது படித்து வரும் மாணவர்களிடம் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் ரக்ஷிகாந்த் என்ற மாணவரின் புகைப்படம் மாறியுள்ளதாக அவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

NEET

அதனால், சென்னை கோபால புரத்தைச் சேர்ந்த மாணவர் ரக்ஷிகாந்த் மற்றும் அவரது தந்தை ரவிக்குமார் முன் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனு அளித்தனர். அந்த மனுவில், 'ஹால் டிக்கெட் வந்த போதே என் மகனின் புகைப்படம் மாறியுள்ளதாக நாங்கள் சொன்னோம். ஆனால், ஹால் டிக்கெட் சரிபார்ப்பின் காலக்கெடு முடிந்து விட்டதால் அப்படியே தேர்வு எழுதும் படி அறிவுறுத்தினர். ஆனால், தற்போது என் மகன் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக என் மீதும் என் மகன் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் எங்களுக்கு முன் ஜாமீன் வழங்குங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Court

அந்த மனுவை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் விசாரித்தார். அதில்,  மனு தாரர்கள் வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக உறுதியளித்ததால், ஜாமீன் விசாரணையை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.