தேசியக் கொடியை அவமதித்தேனா? – எஸ்.வி.சேகர் விளக்கம்

 

தேசியக் கொடியை அவமதித்தேனா? – எஸ்.வி.சேகர் விளக்கம்

பள்ளியில் சொல்லிக் கொடுத்த விஷயத்தைத்தான் பேசினேனே தவிர, தேசியக் கொடியை அவமானப்படுத்தும் வகையில் எதையும் கூறவில்லை என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

தேசியக் கொடியை அவமதித்தேனா? – எஸ்.வி.சேகர் விளக்கம்
தேசியக் கொடியை அவமானப்படுத்தியதாக எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து விளக்க வீடியோவை எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ளார். அதில், “தேசியக் கொடியை என் தாய்க்கு மேலாக, தேசத்தின் கௌரவமான விஷயமாக 17 ஆண்டுகளாக பெருமையுடன், கர்வத்துடன் அணிந்து வருகிறேன். தேசியக் கொடியை அவமதித்ததாக ஒருவர் புகார் கொடுத்துள்ளார் என்றார்கள். தேசியக் கொடியை நான் எந்த அளவுக்கு மதிக்கிறேன் என்பது பற்றி எல்லோருக்கும் தெரியும். தேசியக் கொடி இல்லாமல் நான் வெளியே வருவது இல்லை. தேசியக் கொடியோடு டெல்லிக்கு செல்லும்போது, அரசு அதிகாரிகள் செல்யூட்

 

தேசியக் கொடியை அவமதித்தேனா? – எஸ்.வி.சேகர் விளக்கம்அடிப்பார்கள். நமக்கு ஏன் அடிக்கிறார்கள் என்று பார்க்கும்போது அது தேசியக் கொடிக்கு அளித்த மரியாதை என்பது தெரிந்தது. இன்றும் நினைத்தால் புல்லரிக்கும் பல விஷயங்கள் இந்த தேசியக் கொடியால் எனக்கு நடந்துள்ளது. எனவே, எந்த ஒரு காலகட்டத்திலுமே அதை அவமதிக்கும் விஷயத்தை நான் செய்யவே மாட்டேன். நான் உயிரோடு இருக்கும் வரை அந்த விஷயத்தை செய்ய மாட்டேன். ஏனெனில் இந்தியனாகப் பிறந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவமதித்தேன் என்று கூறுவது தவறான புரிதலாக இருக்கலாம்.

தேசியக் கொடியை அவமதித்தேனா? – எஸ்.வி.சேகர் விளக்கம்
தேசியக் கொடியின் இந்த (நிறங்கள் மதங்களைக் குறிக்கிறது என்ற கருத்து) விஷயங்களை தேச ஒற்றுமைக்காகத்தான் நான் பயன்படுத்துகிறேன். பள்ளிக் கூடங்களில் எல்லாம் எங்களுக்கு அப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்கள். ஒற்றுமைக்காகத்தான் ஜாதி மதத்தைப் பயன்படுத்துகிறோம். சாதி, மதத்தை வைத்து சண்டை போட அதைப் பயன்படுத்தவில்லை.
கொடியில் உள்ள ஆரஞ்சு என்பது இந்துக்கள், வெள்ளை என்பது கிறிஸ்தவர்கள், பச்சை என்பது முஸ்லிம்கள். இந்த மூன்று பேரும் சேர்ந்தால்தான் இந்தியா. மூன்று பேரும் ஒன்றாக இருப்பதுதான் தேசியக் கொடி. பாக்கி சின்ன சின்ன மதங்கள் எல்லாம் சக்கரத்துக்குள் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பெருமையே வேற்றுமையில் ஒற்றுமைதான்.
சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நிகழ்வுகளின்போது கொடியேற்றிவிட்டு தேசியக் கொடியைக் கீழே போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். அதை எல்லாம் எடுத்து வைத்து யார் காலில் படக்கூடாது என்று நினைப்பவன் நான்” என்றார்.
வழக்கமாக உற்சாகமாக, துள்ளலோடு பேசும் எஸ்.வி.சேகர், இந்த விளக்க வீடியோவில் குரல் தழுதழுத்தபடி பேசியிருந்தார். போலீசார் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.