‘சிறையில் உண்ணாவிரதம்’ : முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு!

 

‘சிறையில் உண்ணாவிரதம்’ : முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கணவன் மனைவியான முருகனும் நளினியும் தற்போது கொரோனா பாதிப்பால், வீடியோ காலில் பேசி வருகின்றனர். அவர்கள் இருவரும் உறவினர்களுடனும் பேசி வரும் நிலையில், அண்மையில் முருகனின் உறவினர்கள் வெளிநாட்டில் இருக்கும் ஒரு உறவினரை வீடியோ காலில் இணைத்துள்ளனர்.

‘சிறையில் உண்ணாவிரதம்’ : முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு!

சிறை விதிகளை மீறிய இந்த செயலால் முருகனின் இணைப்பு துண்டித்து விட்ட சிறைத்துறை அதிகாரி, முருகன் மீது போலீசில் புகாரும் அளித்துள்ளார். இதனிடையே, உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்கக்கோரி கடந்த 23ம் தேதியில் இருந்து உண்ணாவிரதம் நடத்தி வருகிறார்.

‘சிறையில் உண்ணாவிரதம்’ : முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு!

இதனால் முருகன் மிகவும் சோர்வடைந்திருப்பதால், அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டிருக்கிறது. உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், முருகன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். இந்த நிலையில், முருகன் மீது சிறைத்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.