‘வெடிகுண்டு வீசி காவலர் கொலை’.. 480 காவல்நிலையங்களில் புகைப்படம் வைத்து மரியாதை!

 

‘வெடிகுண்டு வீசி காவலர் கொலை’.. 480 காவல்நிலையங்களில் புகைப்படம் வைத்து மரியாதை!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, 2 கொலை வழக்குகளில் தொடர்புடைய துரைமுத்து என்ற ரவுடி சுற்றித் திரிவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு போலீசார் சென்றனர். அப்போது போலீசரிடம் இருந்து தப்பிக்க ரவுடி துரைமுத்து நாட்டு வெடிகுண்டு வீசினார். அந்த வெடிகுண்டு தலைமை காவலர் சுப்பிரமணியத்தின் தலையில் விழுந்து வெடித்ததால், காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வெடிகுண்டு வீசிய ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

‘வெடிகுண்டு வீசி காவலர் கொலை’.. 480 காவல்நிலையங்களில் புகைப்படம் வைத்து மரியாதை!

இதனையடுத்து உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், உயிரிழந்த தலைமை காவலர் சுப்பிரமணியத்தின் புகைப்படத்தை வைத்து 480 காவல்நிலையங்களில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. அதே போல நெல்லையில், காவலர் சுப்பிரமணியத்தின் படத்துக்கு டிஜிபி திரிபாதி மரியாதை செலுத்தினார்.

‘வெடிகுண்டு வீசி காவலர் கொலை’.. 480 காவல்நிலையங்களில் புகைப்படம் வைத்து மரியாதை!

அதன் பிறகு பேசிய அவர், போலீசாருக்கு நிதியுதவி அளிப்பதில் எந்த பாரபட்சமும் இல்லை என்றும் வழக்குகள், சம்பவங்களின் அடிப்படையில் போலீஸ் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாகவும் ஒரு சில சம்பவங்களால் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து விட்டதாக நினைக்க வேண்டாம் என்றும் கூறினார். மேலும், போலீசாருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும் இன்னும் பயிற்சிகள் அதிகரிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.