கனிமொழி வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது! – கமிஷனர் தகவல்

 

கனிமொழி வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது! – கமிஷனர் தகவல்

தி.மு.க எம்.பி கனிமொழி இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று சென்னை கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

கனிமொழி வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது! – கமிஷனர் தகவல்சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகன் மரணம் தொடர்பாக தி.மு.க எம்.பி கனிமொழி காட்டமான பதிவுகளை வெளியிட்டு வந்தார். இதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென்று திரும்பப் பெறப்பட்டது. வழக்கமாக சுழற்சி முறையில் ஐந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக காவலர் தட்டுப்பாடு உள்ளதாகவும் கொரோனா தடுப்பு பணிக்கு அவர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வேறு எந்த ஒரு அரசியல் காரணங்களுக்காகவும் பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

கனிமொழி வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது! – கமிஷனர் தகவல்நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க உள்ளது. அந்த கட்சி எம்.பி-க்களின் துணைத் தலைவராக கனிமொழி உள்ளார். அவருடைய பாதுகாப்பை எப்படி ரத்து செய்யலாம் என்று தி.மு.க-வினர் கேள்வி எழுப்பிவந்தனர். கனிமொழிக்கு வழங்கப்பட்டுவந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வட இந்தியத் தொலைக்காட்சிகளிலும் பெரிய அளவில் செய்தி வெளியானது.

கனிமொழி வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது! – கமிஷனர் தகவல்இந்த நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், “தி.மு.க எம்.பி கனிமொழியின் சி.ஐ.டி நகர் வீட்டுக்கு மீண்டும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். எதற்காக பாதுகாப்பு விலக்கப்பட்ட உடனேயே மீண்டும் வழங்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களைக் கூறவில்லை. தற்போது பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.