பிஎஸ்சி படிப்பில் சேரப்போகும் ‘ஷின்சான்’! தரவரிசைப்பட்டியலில் குழப்பம்…

 

பிஎஸ்சி படிப்பில் சேரப்போகும் ‘ஷின்சான்’! தரவரிசைப்பட்டியலில் குழப்பம்…

மேற்கு வங்கத்தில் கல்லூரி தரவரிசை பட்டியலில் பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான ஷின்சான் பெயர் இடம்பெற்றுள்ளது.

கொரோனா பரவலால் அனைத்து மாநிலங்களிலும் கல்லூரி சேர்க்கை ஆன்லைனில் நடத்தப்பட்டுவருகிறது. மேற்கு வங்கத்திலும் ஆன்லைனில் விண்ணப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சிலிகுரியிலுள்ள கல்லூரி வெளியிட்ட பிஎஸ்சி படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது. அதில் பிரபல கார்ட்டூன் கதாப்பாத்திரமான ஷின்சான் பெயர் இடம்பெற்றுள்ளது.

பிஎஸ்சி படிப்பில் சேரப்போகும் ‘ஷின்சான்’! தரவரிசைப்பட்டியலில் குழப்பம்…

இதனைப்பார்த்த பலர் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் அந்த பட்டியலை நீக்கி புதிய பட்டியலை கல்லூரி நிர்வாகம் வெளியிட்டது. முன்னதாக மால்டா மாணிக்சக் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் பாடகி நேகா கக்கரின் பெயரும், மற்றொரு கல்லூரி தரவரிசையில் நடிகை சன்னி லியோனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஷின்சான் பெயர் இடம்பெற்றது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.