நோயாளிகளின் மாஸ்க்குகள் -வாங்கிய தொழிற்சாலைகள் -அதை என்ன செஞ்சாங்கன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாயிடுவீங்க .

நோயாளிகளின் மாஸ்க்குகள் -வாங்கிய தொழிற்சாலைகள் -அதை என்ன செஞ்சாங்கன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாயிடுவீங்க .

கொரானா நோயாளிகள் பயன்படுத்திய பழைய மாஸ்க்குகளை வைத்து மெத்தை தயாரித்து விற்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர் .

நோயாளிகளின் மாஸ்க்குகள் -வாங்கிய தொழிற்சாலைகள் -அதை என்ன செஞ்சாங்கன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாயிடுவீங்க .

மஹாராஷ்ட்ரா தலைநகர் மும்பைக்கு வடகிழக்கில் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்கானில் உள்ள குசும்பா கிராமத்தில் “மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்ஐடிசி)”அமைந்துள்ளது . இங்கு அம்ஜத் அகமது மன்சூரி என்பவர் ஒரு மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார் .அவரின் படுக்கை மெத்தைக்குள் கொரானா நோயாளிகள் பயன்படுத்திய மாஸ்க்குகளை வைத்து தைத்துள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது .
அதனால் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் போலீசார் சோதனை நடத்தினர் .அப்போது அங்கு மெத்தைகளுக்குள் பருத்தி மற்றும் பஞ்சுகளை பயன்படுத்தாமல் அப்புறப்படுத்தப்பட்ட மாஸ்க்குகளை பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர் .மேலும் அங்கு மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய மாஸ்க்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் பிறகு அந்த தொழிற்சாலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பின்னர் அந்த தொழிற்சாலைக்கு போலிசார் பூட்டி சீல் வைத்தனர்
கொரோனா வைரஸ் தொற்று, நாட்டில் கழிவு மேலாண்மை முறையை அதிகப்படுத்தியுள்ளது. ஜூன் மற்றும் செப்டம்பர் 2020 க்கு இடையில், நாடு 18,000 டன் கோவிட் -19 தொடர்பான மருத்துவ கழிவுகளை உற்பத்தி செய்தது.இவற்றை பலர் தவறாக இப்படி பயன்படுத்துவது மேலும் நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என்று காவல் துறை அதிகாரிகள் கூறினார்கள் .

நோயாளிகளின் மாஸ்க்குகள் -வாங்கிய தொழிற்சாலைகள் -அதை என்ன செஞ்சாங்கன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாயிடுவீங்க .