கையை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்… குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள மனு கொடுத்த சமூக ஆர்வலர்!

கையை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்… குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள மனு கொடுத்த சமூக ஆர்வலர்!

தன் கையை உடைத்தும் இல்லாமல் தன் குடும்பத்தினர் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவேன் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டுவதாக கூறி, தன்னை தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவேந்திரன் மனு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

கையை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்… குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள மனு கொடுத்த சமூக ஆர்வலர்!
தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்க பொதுச் செயலாளராக இருப்பவர் தேவேந்திரன். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தொடர்ந்து பல மனுக்கள் தாக்கல் செய்வதால் இவர் மீது போலீசாருக்கு எரிச்சல் உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் நாதமுனி என்பவர் மஃப்டியில் வந்து சோதனை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர், சப்-இன்ஸ்பெக்டர் என அனைவரையும் ஆபாசமாக திட்டி ஆடியோ வெளியிட்டார்.

கையை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்… குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள மனு கொடுத்த சமூக ஆர்வலர்!
இந்த நிலையில் தேவேந்திரனை போலீசார் கைது செய்ய முயன்றதாகவும் அவர் தப்பிக்க முயன்று பாலத்தில் இருந்து விழுந்து கையை உடைத்துக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

கையை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்… குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள மனு கொடுத்த சமூக ஆர்வலர்!
இந்த நிலையில் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தேவேந்திரன் வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “என் மீது போலீசார் சுமத்திய குற்றச்சாட்டு அனைத்தும் பொய்யானது. இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் என்னை பொய் வழக்கு ஒன்றில் கைது செய்து, ஆவடி அருகே தனி இடத்தில் வைத்து என் கையை உடைத்தார். மேலும் என் குடும்பத்தினர் மீது பொய் வழக்குப் போடப் போவதாக மிரட்டினார். சாதாரண உடையில் தினமும் வீட்டுக்கு வந்து மிரட்டி செல்கிறார். இதனால் என் குடும்பத்துக்கு பாதுகாப்பு வேண்டும் என்று போலீசில் மனு கொடுத்துள்ளேன்.

கையை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்… குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள மனு கொடுத்த சமூக ஆர்வலர்!
பாதுகாப்பு அளிக்க முடியாது என்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன்” என்றார்.