தாய்பால் குடித்த சில நிமிடங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட கதி...போலீசார் செய்த சாதுரிய செயல்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Main



தாய்பால் குடித்த சில நிமிடங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட கதி...போலீசார் செய்த சாதுரிய செயல்!

 குழந்தை
குழந்தை

தாய்பால் குடித்ததால் குழந்தை ஒன்று மரணத்தின் விளிம்புக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரேசில் சாவோ பாலோ பகுதியை சேர்ந்தவர் எல்விஸ். இவருக்கு  கிறிஸ்டினா மார்க்ஸ் என்ற மனைவியும்  லூகாஸ்  என்ற பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தையின் உடலில் சிவப்பு சிவப்பாக  புள்ளிகள் தோன்றியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அதன் பெற்றோர், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ttn

அப்போது அங்கு இருந்த மூன்று போலீசார்,  குழந்தைக்கு முதலுதவி அளித்துள்ளனர். அப்போது குழந்தை மயங்கியுள்ளது. உடனே ஒரு போலீஸ் குழந்தையின் வாயில் வாய் வைத்து சுவாசமூட்ட முயற்சி செய்துள்ளார். மற்றொருவர் தொடர்ந்து குழந்தையின் முதுகில் தட்டியுள்ளார். இதனால் சில நிமிடங்களில் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

ttn

இதுகுறித்து கூறும் குழந்தையின் தாய் கிறிஸ்டினா மார்க்ஸ், குழந்தைக்கு தாய் பால் கொடுத்ததும் சில நிமிடங்களில் அதன் உடல் சிவப்பாகி மூச்சு விட சிரமப்பட்டது என்று கூறியுள்ளார். குழந்தைக்கு முதலுதவி செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.