பொதுமக்களே உஷார்! மாஸ்க் கொடுப்பதுபோல் ஏமாற்றும் மர்ம நபர்கள்!!காவல் துறையின் எச்சரிக்கை

பொதுமக்களே உஷார்! மாஸ்க் கொடுப்பதுபோல் ஏமாற்றும் மர்ம நபர்கள்!!காவல் துறையின் எச்சரிக்கை

அரசாங்கத்திலிருந்து இலவசமாக முகக்கவசம் தரச் சொல்லியுள்ளார்கள் என்று கூறிக்கொண்டு சிலர் மக்களை ஏமாற்றுவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

குற்றம் செய்யும் எண்ணத்தில் சிலர் வீடு வீடாக வந்து , மயக்க மருந்தில் நனைக்கப்பட்ட முகக் கவசத்தை எடுத்து வந்து, அதை வீட்டிலுள்ளவர்களிடம் கொடுத்து, வீட்டிலுள்ளவர்களை அணிந்து கொண்டு சரியாக இருக்கிறதா என்று பார்க்கும்படி வற்புறுத்துகின்றனர். அவ்வாறு அணியும் போது அணிந்தவர்கள் மயங்கி விழுந்து விடுவதாகவும், அதன் பின்னர் மாஸ்க் தந்த குற்றவாளிகள் மயங்கி விழுந்தவரின், மற்றும் வீட்டிலுள்ள பொருட்களைத் திருடிச் செல்வதாக காவல்துறைக்கு வந்த புகாரின் மூலம் தெரிய வருகிறது.

பொதுமக்களே உஷார்! மாஸ்க் கொடுப்பதுபோல் ஏமாற்றும் மர்ம நபர்கள்!!காவல் துறையின் எச்சரிக்கை
குற்றம் செய்பவர்கள் தமிழக சுகாதாரத்துறையிலிருந்து வருவதாகவும் பொய் சொல்கிறார்கள் எனவே பொது மக்கள் இந்த விபரத்தை அறிந்து கொண்டு எச்சரிக்கையுடன் இருக்கும் படி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.