‘சீட் பெல்ட்’ தேவையை அருமையாக விளக்கும் போலீஸ்: வைரல் வீடியோ!

 

‘சீட் பெல்ட்’ தேவையை அருமையாக விளக்கும் போலீஸ்: வைரல் வீடியோ!

வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து காவலர் ஒருவர் பொதுமக்களுக்கு விளக்கும் வீடியோ ஒன்றி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் காவலர் ஒருவர் காரில் அமர்ந்து கொண்டு வாகன ஓட்டிகளிடம், ‘காரில் சீட் பெல்ட் அணிந்து கொண்டு சென்றால் திடீர் விபத்து நேரும் போது சீட் பெல்ட் நம் உயிரைக் காக்கும். லேசாக இழுக்கும் போது வளைந்து கொடுக்கும் சீட் பெல்ட் வேகமாக இழுத்தால் வளையாது. இந்த மெக்கானிஸத்தில் செயல்படும் சீட் பெல்ட் விபத்து நடந்தால், நம்மை காரின் இருக்கையுடன் இழுத்துப் பிடித்து உயிர் சேதத்தை தடுக்கும். சீட் பெல்ட் அணிந்திருந்தால் வாகனம் 10 முறை உருண்டால் கூட நமக்கு ஏதும் ஆகாது. ரோலர் கோஸ்டரில் செல்வது போன்ற பாதுகாப்பு இருக்கும்’ என்று கூறுகிறார்.

‘சீட் பெல்ட்’ தேவையை அருமையாக விளக்கும் போலீஸ்: வைரல் வீடியோ!

தொடர்ந்து, ‘காரின் முன்னால் இருப்பவர்கள் மட்டும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது தவறான புரிதல். ரெக்கார்டுகளின் படி பின்புறம் அமர்ந்திருப்பவர்களுக்கு தான் விபத்து நேரும் போது அதிக சேதம் ஏற்படும். 70% அவர்களுக்கு அதிகமாக காயம் ஏற்படும். விபத்து நேர்ந்தால் காரின் பின்பக்கம் இருப்பவர்கள் தான் முதலில் உயிரிழப்பார்கள். அதனால் பின்பக்கம் இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே ஏர் பேக் உங்களை காப்பாற்றும்’ என்று கூறுகிறார்.

மேலும், நீங்கள் சீட் பெல்ட் மற்றும் அணிவதோடு மட்டுமில்லாமல், சீட் பெல்ட்டின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் குறைந்தது 5 பேருக்கு சொல்ல வேண்டும் என்று அங்கிருந்தவர்களிடம் கோரிக்கை விடுக்கிறார். இந்த வீடியோ தற்போது வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.