ஊரடங்கை மீறிய இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்… வீடியோ வெளியானதால் பரபரப்பு!

 

ஊரடங்கை மீறிய இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்… வீடியோ வெளியானதால் பரபரப்பு!

தஞ்சை

கும்பகோணம் அருகே ஊரடங்கை மீறி வெளியே சென்ற இளைஞரை, போலீசார் தாக்கியது குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார்கோவில் பகுதியில், நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபு என்பவர் இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் சென்றள்ளார். அவரை காவலர்கள் நிறுத்த முற்பட்டபோது நிற்காமல் சென்றுள்ளார்.

ஊரடங்கை மீறிய இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்… வீடியோ வெளியானதால் பரபரப்பு!

இதனால் காவலர்கள் விரட்டிச்சென்று பிரபுவை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, பிரபு காவலர் கலைச்செல்வன் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது, இவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த காவலர்கள் பிரபுவை காவல் நிலையம் அழைததுச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதனிடையே, கலைச்செல்வனை தாக்கியபோது பிரபுவை, 6 காவலர்கள் சேர்ந்து தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இளைஞரை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.