“நீங்க இதெல்லாம் செய்திருந்தா இந்நேரம் உங்கள் ஏடிஎம் கார்டை வேறு யாராவது காப்பி எடுத்திருப்பார்கள்” -உஷார் !

“நீங்க இதெல்லாம் செய்திருந்தா இந்நேரம் உங்கள் ஏடிஎம் கார்டை வேறு யாராவது காப்பி எடுத்திருப்பார்கள்” -உஷார் !

ஹரியானாவின் ஹிசாரில் வசிக்கும் அனில் குமார் மற்றும் ஹரியானாவின் பிவானியில் வசிக்கும் வினோத் குமார் ஆகிய இருவருக்கும் அடுத்தவர் ஏடிஎம் கார்டை காப்பி எடுத்து அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் கணக்கிலிருந்து பணத்தை ஆட்டைய போடுவதுதான் முழுநேர வேலை .அவர்களின் நெட்ஒர்க் இந்தியா முழுவதும் பரவியுள்ளது .
இந்த கூட்டத்தை சேர்ந்த நபர், நீங்க ஏடிஎம் சென்டருக்குள் நுழையும்போது உங்களுக்கு முன்னாடியே சென்றுவிடுவார்கள் . உங்களுக்கு முன்னாடி ஏடிஎம் க்குள் இருக்கும் அவர்கள், உங்களுக்கு தெரியாமலே உங்கள் கார்டை க்ளோனிங் செய்யும் நுட்பத்தை ஏடிஎம் மெஷினுக்குள் பொருத்திவிட்டு வந்து விடுவார்கள் .நீங்கள் பணமெடுக்க உங்கள் ஏடிஎம் கார்டை சொருகியதும் அது ஆட்டோமேட்டிக்காக உங்கள் கார்டை க்ளோனிங் செய்து விடும்.

“நீங்க இதெல்லாம் செய்திருந்தா இந்நேரம் உங்கள் ஏடிஎம் கார்டை வேறு யாராவது காப்பி எடுத்திருப்பார்கள்” -உஷார் !
பிறகு அவர்கள் உங்களுக்கு தெரியாமலே ,ஏன் உங்கள் அக்கௌன்ட்டிலிருந்து பணம் எடுத்த மெசேஜ் கூட உங்களுக்கு வரவிடாமல் பணம் எடுத்து சென்று விடுவார்கள் .அந்தளவுக்கு டெக்னலாஜியை இந்த இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் கண்டு பிடித்து பலரின் அக்கௌன்ட்டிலிருந்து பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள் .
இவர்கள் ஆகஸ்ட் 2 ம் தேதி, புது தில்லி ரயில் நிலையத்தில் ஹவுரா ராஜதானி ரயிலில் வந்தபோது ரயில்வே போலீசாரை கண்டதும் ஓடியபோது அவர்கள் பிடித்து விசாரித்தனர் .அப்போது அவர்களின் பெட்டியிலிருந்து 40க்கும் மேற்பட்ட போலியான ஏடிஎம் கார்டுகள் மற்றும் க்ளோனிங் இயந்திரம் போன்ற பல தொழில் நுட்ப மென்பொருட்களை பறிமுதல் செய்தனர் .இவர்கள் கூட்டத்தை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான ரவி என்பவர் இவர்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்டுள்ளார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர் .இனி ஏடிஎம் சென்டருக்கு பணமெடுக்க போனால் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க .

“நீங்க இதெல்லாம் செய்திருந்தா இந்நேரம் உங்கள் ஏடிஎம் கார்டை வேறு யாராவது காப்பி எடுத்திருப்பார்கள்” -உஷார் !