“திருட போன இடத்தில செல்போனை விட்டு சென்ற புது திருடர்கள்” -நகைக்கடை கொள்ளையில் அன்று இரவே சிக்கினார்கள் .

“திருட போன இடத்தில செல்போனை விட்டு சென்ற புது திருடர்கள்” -நகைக்கடை கொள்ளையில் அன்று இரவே சிக்கினார்கள் .

தொழிலுக்கு புதுசா வந்த திருடர்கள் ஒரு நகைக்கடைக்குள் புகுந்து நகை ,பணத்தை திருடி செல்லும்போது அவர்களின் செல்போனை விட்டு சென்றதால், உடனே போலீசின் கையில் அவர்கள் சிக்கினார்கள் .

“திருட போன இடத்தில செல்போனை விட்டு சென்ற புது திருடர்கள்” -நகைக்கடை கொள்ளையில் அன்று இரவே சிக்கினார்கள் .

டெல்லியின் உத்தம் நகர் பகுதியிலிருக்கும் ஒரு பிரபலமான நகைக்கடையில் ஜூலை 30ம் தேதி இரவு கொள்ளையர்கள் புகுந்து நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்று விட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்து விரைந்து வந்தார்கள் .
அந்த நகை கடைக்கு வந்து கொள்ளை போன பொருட்களை ஆராய்ந்த போலீசுக்கு அங்கு 750 கிராம் தங்கம், கொள்ளை போனது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் 15 கிலோ வெள்ளி, 1.33 லட்சம் ரூபாய் பணம் , ஒரு பர்ஸ், சில மொபைல் போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.மேலும் சி.சி.டி.வி கேமராக்களின் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர்களையும் (டி.வி.ஆர்) கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
அப்போது அங்கு கொள்ளையர்களில் ஒருவர் விட்டு சென்ற செல்போன் போலீசின் கையில் கிடைத்தது ,அந்த செல்போன் மூலம் போலீசார் உடனே கொள்ளையர்களை எளிதாக பிடிக்க முடிந்தது .
இதனால் கொள்ளையர்கள் கோவிந்த் பாபு, திலீப், ஆகாஷ், காந்தர்வ் சன்னி, அமித் சுக்லா மற்றும் விஜய், கமல் ஆகிய 6 பேரும் டெல்லியின் பஜான்புரா பகுதியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் கொள்ளையடித்த நகைகளுடன் , ஒரு கைத்துப்பாக்கி, ஒரு ரிவால்வர் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் போலீசார் மீட்டுள்ளனர்.

“திருட போன இடத்தில செல்போனை விட்டு சென்ற புது திருடர்கள்” -நகைக்கடை கொள்ளையில் அன்று இரவே சிக்கினார்கள் .