போலியாக கொரானா லேப் நடத்தி கொள்ளை -பரிசோதனை செய்த பலர் பாதிப்பு -ஒருவர் உயிரிழப்பு.

 

போலியாக கொரானா லேப் நடத்தி கொள்ளை -பரிசோதனை செய்த பலர் பாதிப்பு -ஒருவர் உயிரிழப்பு.

கொரானா மக்களை கொள்ளும் இந்த நேரத்தில், இந்த வைரஸை பயன்படுத்தி பலர் மோசடி செய்தும் சம்பாதிக்கின்றனர் .கொல்கத்தாவில் கொரானா லேப் ஒன்றை போலியாக நடத்தி, பலருக்கு போலியான ரிசல்ட் வழங்கியதில் ஒருவரின் உயிர் போனதால் அந்த லேப் மூடப்பட்டது.

போலியாக கொரானா லேப் நடத்தி கொள்ளை -பரிசோதனை செய்த பலர் பாதிப்பு -ஒருவர் உயிரிழப்பு.
கொல்கத்தாவில் வசிக்கும் பிஸ்வாஜித் சிக்தார் (23) மற்றும் இந்திரஜித் சிக்தர் (26), மற்றும் அனித் பைரா ஆகிய மூவரும் போலியாக கொரானா பரிசோதனை மையம் ஒன்றை நடத்தி வந்தனர் .இவர்கள் தாங்கள் இந்திய மருத்துவ கவுன்சிலில் பணி புரிவதாக அனைவரிடமும் பொய் சொல்லியுள்ளனர் .
இவர்களை நம்பி கொல்கத்தா நகரில் பலர் கொரானா பரிசோதனைகள் செய்து கொண்டு போயுள்ளனர் .கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு 57 வயதான நபர் இவர்களிடம் கொரானா பரிசோதனை செய்து கொண்டபோது ,அவர்கள் அவரை பரிசோதித்துவிட்டு அவருக்கு கொரானா நெகடிவ் என்று ரிசல்ட்டை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தனர் .
ஆனால் வீட்டுக்கு வந்த மறுநாள் அவருக்கு உடல்நிலை மோசமாகியதில் அவர் இறந்து போனார் .இதனால் இறந்த அவருக்கு மீண்டும் கொரானா பரிசோதனை, அரசு சார்பில் நடத்தப்பட்டதில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது .இதனால் இறந்தவரின் குடும்பத்தினர் முன்பு நெகடிவ் ரிசல்ட் தந்த அந்த ஆய்வகத்தின் மீது போலிசில் புகார் அளித்தனர் .உடனே புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கொல்கத்தா நகர் முழுவதும் இயங்கும் அனைத்து கொரானா ஆய்வகங்களில் சோதனை நடத்தினர் .அப்போது பிஸ்வாஜித் சிக்தார் (23) மற்றும் இந்திரஜித் சிக்தர் (26), மற்றும் அனித் பைரா ஆகிய மூன்று பேர் நடத்திய லேப் போலியானது என்றும் அவர்கள் அங்கீகாரம் பெறவில்லையென்றும் கணடறியப்பட்டு அந்த மூவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் நடத்திய லேப் மூடப்பட்டது .

போலியாக கொரானா லேப் நடத்தி கொள்ளை -பரிசோதனை செய்த பலர் பாதிப்பு -ஒருவர் உயிரிழப்பு.