ஈரோட்டில் துணிகரம்- உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி கடைகளில் ஏமாற்றிய 3 பேர் கைது!

 

ஈரோட்டில் துணிகரம்- உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி கடைகளில் ஏமாற்றிய  3 பேர்  கைது!

ஈரோடு, ஆக 22 –

ஈரோடு ரோஜா கார்டன் சுண்ணாம்பு ஓடை பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி ரேவதி (வயது 55 ) .சம்பவத்தன்று ரேவதி வீட்டில் இருந்தார் அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டுக்கு வந்து தங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உங்கள் கடையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் விற்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது எனவே உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர் அப்போது ரேவதி தனது கணவருக்கு போன் செய்ய முயன்றார் அந்த நபர்கள் உங்கள் கணவரை நாங்கள் கைது செய்துள்ளோம் என்றனர்.

ஈரோட்டில் துணிகரம்- உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி கடைகளில் ஏமாற்றிய  3 பேர்  கைது!

இதையடுத்து அந்த நபர்கள் சோதனை செய்வது போன்று நடித்து வீட்டில் இருந்த ரூ 20 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டனர் பின்னர் ரேவதியிடம் பெயர் முகவரி கையெழுத்து வாங்கிக்கொண்டு அந்த நபர்கள் சென்றனர் இதையடுத்து ரேவதி தனது கணவருக்கு போன் செய்தார் அப்போது அவரது கணவர் தான் கடையில் வியாபாரத்தில் இருப்பதாக கூறினார் இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரேவதி இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது சந்தேகப்படும்படி மூன்று நபர்கள் வந்தனர் அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள்தான் ரேவதி வீட்டில் கைவரிசை காட்டிய தெரியவந்தது போலீஸ் விசாரணையில் அவர்கள் பள்ளிபாளையத்தில் சேர்ந்த பாலாஜி என்கிற சௌந்தர்ராஜன் கிஷோர் மற்றும் 19 வயது வாலிபர் என தெரியவந்தது 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர்கள் இதேபோன்று தர்மபுரி ஓமலூர் சேலம் நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என்று சொல்லி கைவரிசை காட்டிய தெரியவந்தது அவர்கள் 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர் மேலும் கவுந்தப்பாடி களும் இதை போல் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்