அமெரிக்க அதிபரை கொல்ல சதியா? வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம்!

அமெரிக்க அதிபரை கொல்ல சதியா? வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம்!

வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் விஷம் தடவப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன்னில் வெள்ளை மாளிகை இருக்கிறது. அமெரிக்க அதிபரான ட்ரம்ப்-இன் அதிகாரப்பூர்வமான இல்லம் அதுவே. இதனால் எப்போதுமே வெள்ளை மாளிகையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட்டிருக்கும். இந்த நிலையில், வெள்ளை மாளிகைக்கு திடீரென கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில் ஏதோ இருப்பதாக உணர்நத பாதுகாப்பு அதிகாரிகள் அதனை சோதனை செய்தனர்.

அமெரிக்க அதிபரை கொல்ல சதியா? வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம்!

வழக்கமாக வெள்ளை மாளிகைக்கு வரும் அனைத்தையும் அதிகாரிகள் சோதனை செய்வது போல, இந்த கடிதத்தையும் சோதனை செய்து பார்த்த போது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கனடாவிலிருந்து அனுப்பப்படுவதாக அந்த கடிதத்தின் முகவரியில் ரிசின் என சொல்லப்படும் கொடிய விஷம் தடவப்பட்டிருந்துள்ளது. இது வெள்ளை மாளிகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்க அதிபரை கொல்ல சதியா? வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம்!

அமெரிக்காவில் தேர்தல் நடக்க இருப்பதால், அதிபர் ட்ரம்ப்பை கொல்ல சதி திட்டம் தீட்டி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா என சந்தேகித்த அதிகாரிகள், அதனை பரிசோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர். அதே போல, அந்த கடிதத்தை யார் அனுப்பியது என்றும் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கடந்த 2014-ல் அதிபராக ஒபாமா இருந்த போது, இதே போல விஷம் தடவப்பட்ட கடிதம் அனுப்பிய வருக்கு 25 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.