ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு விஷம் – தீவிரமாகும் விசாரணை

 

ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு விஷம் – தீவிரமாகும் விசாரணை

ரஷ்ய நாட்டுக்கு பெரும் சிக்கலாக உருவாகி வருகிறது எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் விஷயம்.

ரஷ்ய நாட்டின் எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நவ்லனி. ரஷ்யா ஃபார் த ஃபீச்சர் எனும் அரசியல் கட்சியை உருவாக்கி, அதன் தலைவராக இருக்கும் அலெக்சி நவ்லனிக்கு 44 வயதாகிறது. இக்கட்சியை அவர் ஏழாண்டுகளுக்கு முன் உருவாக்கினார்.

ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு விஷம் – தீவிரமாகும் விசாரணை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சனம் செய்பவர் அலெக்சி நவ்லனி.  சென்ற தேர்தலில் அவர் வெல்வார் என்றும் சிலரால் கூறப்பட்டது. ஆனால், ரஷ்ய அதிபர் தரப்பில் அலெக்சி நவ்லனி மீது ஊழல் குற்றசாட்டுகள் கூறப்பட்டு, தேர்தலில் நிற்க முடியாத நிலை வந்தது.

அலெக்சி நவ்லனி உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் அவர் ஜெர்மனியின் புகழ்பெற்ற மருத்துவமனையில் அவசர நிலையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கும்போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தரப்பில் கூறப்படுகிறது.

ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு விஷம் – தீவிரமாகும் விசாரணை

ரஷ்யா அரசு அலெக்சி நவ்லனிக்கு விஷம் வைத்திருக்க வாய்ப்பிருப்பதாக ஜெர்மனி குற்றம் சாட்டியது. இதனால், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேஎண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் இந்த விஷயத்தில் அடுத்த கட்ட  நகர்வாக, அலெக்சி நவ்லனி தங்கியிருந்த ஹோட்டலில் விசாரணை நடைபெற்றது. அது குறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் அலெக்சி நவ்லனி குடித்த தண்ணீர் பாட்டிகளையும் ஆராய்ந்திருக்கிறார்கள்.

நவ்லனி குடித்த தண்ணீரில் நரம்பு மண்டலத்தைக் கடுமையாகத் தாக்கும் விஷம் கலந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. எனவே, இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.