’ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு விஷம்?’ ஜெர்மனி குற்றச்சாட்டு

 

’ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு விஷம்?’ ஜெர்மனி குற்றச்சாட்டு

உலக வல்லரசு நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின்.

ரஷ்ய நாட்டின் எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நவ்லனி. ரஷ்யா ஃபார் த ஃபீச்சர் எனும் அரசியல் கட்சியை உருவாக்கி, அதன் தலைவராக இருக்கும் அலெக்சி நவ்லனிக்கு 44 வயதாகிறது. இக்கட்சியை அவர் ஏழாண்டுகளுக்கு முன் உருவாக்கினார்.

அலெக்சி நவ்லனி உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் அவர் ஜெர்மனியின் புகழ்பெற்ற மருத்துவமனையில் அவசர நிலையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கும்போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தரப்பில் கூறப்படுகிறது.

’ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு விஷம்?’ ஜெர்மனி குற்றச்சாட்டு

உலகின் பெரிய நாட்டில் ஒன்றான ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவருக்கு விஷம் வைக்கப்பட்டது எனும் தகவல் உண்மையில் பலருக்குமே அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த விவகாரத்தில் ரஷ்யாவில் ஆளும் அரசின் நிலைபாடு என்ன என்பதை உடனே விளக்கம் வேண்டும் என அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்ற மாதம்தான் உலகின் முதல் கொரோனாவுக்கான தடுப்பூசியைக் கண்டறிந்து, அதைப் பதிவும் செய்தது ரஷ்யா. அந்தத் தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்தும் முயற்சிகளின் படிப்படியாக இறங்கி உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் ஆளும் கட்சிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.

விளாடிமிர் புடின் தரப்பிலிருந்து என்ன பதில் வரும் என்று உலகமே ஆவலோடு காத்திருக்கிறது.