இந்தியாவுக்கு வடக்கு மட்டுமே திசையாகுமா? கவிஞர் வைரமுத்து கண்டன அறிக்கை!

இந்தியாவுக்கு வடக்கு மட்டுமே திசையாகுமா? கவிஞர் வைரமுத்து கண்டன அறிக்கை!

இந்தி தெரியாதா என கனிமொழி எம்.பி.யிடம் கேட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க எம்.பி கனிமொழியிடம் விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா என்று கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கு வடக்கு மட்டுமே திசையாகுமா? கவிஞர் வைரமுத்து கண்டன அறிக்கை!

இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. இந்த விவாகரத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தியாவுக்கு வடக்கு மட்டுமே திசையாகுமா? கவிஞர் வைரமுத்து கண்டன அறிக்கை!

இந்நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ” இந்திதான் இந்தியாவை ஆளப்பிறந்த மொழி என்ற ஆதிக்கம் சரியாகுமா? இந்தியாவுக்கு வடக்கு மட்டுமே திசையாகுமா? இந்திய மொழிகளுக்கு சம உரிமை வழங்குவது தான் நாட்டை இணைத்துள்ள கயிறை இற்று போகாமல் கட்டி காக்கும். ஆதிக்கத்தின் ஆம்பாறத் தூணியில் இருந்து தெற்கு நோக்கி வீசப்பட்ட நஞ்சில் நனைத்த அம்பு அது” என்றும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.