• April
    04
    Saturday

Main Area

Main



திரைமொழி இயக்குனரே சென்று வாருங்கள் அய்யா: கவிஞர் அறிவுமதி

அறிவுமதி
அறிவுமதி

உலகத்திரைமொழிக்கு ஒத்திசைவாக ஒரு
தமிழ்த்திரைமொழியைக் கண்டெடுத்தவர்.
உரையாடலாசிரியராக உதடுகளுக்கு எழுதி 
எழுதி இறுதி வெற்றிசெய்த இவர்.... இயக்குனராகிய 
பிறகு எழுதிய உரையாடல்களெல்லாம்
 இமைகளாய் பேசுவதற்கு மட்டும்தான்.
தமது செவ்வகத் தோப்பிற்குள் உலவுகிற 
அத்தனைக் கதைமாந்தர்கள் மீதும் பார்வையாளர்களுக்கு
உயிருக்கு நெருங்கிய உறவை ஏற்படுத்திவிடுகிற
ஆற்றல் இவரது இயக்கத்தின் தனித்தன்மை.
பாறைகளில் வழியும் தண்ணீரின் அழகில்....
முரண்களின் தெளிந்த பின்புலத்தில் உறவுகளின் 
நெகிழ்வுத் தன்மையைக் காட்டி நம்மை 
நெக்குருகச் செய்தவர். தமிழ்த் திரையுலக
வரலாற்றில் இவரது பெயர் இயக்குனர்களின்
இயக்குனர் என்கிற தளத்தில் என்றும் இருக்கும்.

-அறிவுமதி

 

இதையும் படிங்க: இயக்குநர் மகேந்திரன்: வாழ்வின் சில உதிரிப்பூக்கள்

2018 TopTamilNews. All rights reserved.