போகோ சி3 போன் -பிளிப்கார்டில் 6ம் தேதி அறிமுகம்!

 

போகோ சி3 போன் -பிளிப்கார்டில் 6ம் தேதி அறிமுகம்!

வரும் 6ம் தேதி சி3 என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போனை போகோ பிராண்டில் அறிமுகப்படுத்த சியோமி திட்டமிட்டுள்ளது.

போகோ சி3 போன் -பிளிப்கார்டில் 6ம் தேதி அறிமுகம்!

இந்த போன் பிளிப்கார்ட் வலைதளத்தில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. எனினும் இதன் விலை மற்றும் விற்பனை தொடங்கும் தேதி குறித்து சியோமி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனிடையே இந்த புதிய போன், 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டதாக இருக்கும் என்றும் அதன் விலை 10,999 ரூபாய் என்றளவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க சியோமி நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மலேசியாவில் ரெட்மி 9சி என்ற போனை அறிமுகப்படுத்தியது. அந்த போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. எனவே அந்த போன் தான் போகோ பிராண்டில் சி3 என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

போகோ சி3 போன் -பிளிப்கார்டில் 6ம் தேதி அறிமுகம்!

அந்த ரெட்மி 9சி போன், 6.53 இன்ச் திரை, ஆண்டிராய்ட் 10 இயங்குதளம், மீடியாடெக் ஹீலியோ பிராசசர், என சகல வசதிகளுடன் பின்புறத்தில் 13 எம்பி மற்றும் 2 எம்பி கேமராக்களையும், முன்புறத்தில் 5 எம்பி கேமராக்களுடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் சார்ஜர், விரல்ரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆகிய வசதிகளுடன் அறிமுகமமாகி இருந்தது. எனவே இதே வசதிகளை போகோவின் சி3 போனிலும் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

-எஸ். முத்துக்குமார்