பாமக தனித்துப் போட்டி? – அதிமுக கூட்டணியில் புதிய கட்சியா?

 

பாமக தனித்துப் போட்டி? – அதிமுக கூட்டணியில் புதிய கட்சியா?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்நிலையில் திமுக – அதிமுக இரு கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளோடு தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

சென்ற ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் போட்டியிட்டன. ஆனால், ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதியை மட்டுமே வெல்ல முடிந்தது. அதனால், இதே கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்றே அதிமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பல நாட்களாக ஏற்றுக்கொள்ளவே இல்லை. இரு நாட்களுக்கு முன் தான் பாஜகவின் தேசிய செயலாளர் சி.டி.ரவி ‘அதிமுகவே முதல்வர் வேட்பாளரைத் தீர்மானிக்கும்’ என்று தெரிவித்திருந்தார்.

பாமக தனித்துப் போட்டி? – அதிமுக கூட்டணியில் புதிய கட்சியா?

பாஜகவை சரிகட்டிய அதிமுக இப்போது பாமகவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பாமக தலைவர் ராமதாஸை இரு முறை அதிமுக அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், ராமதாஸ் பிடிகொடுத்து பேச வில்லை என்கிறார்கள்.

ராமதாஸூம் தனது ட்விட்டர் பக்கத்தில், ’தமிழக அமைச்சர்கள் திரு. பி.தங்கமணி, திரு.எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர். அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றே பதிவிட்டு உள்ளார்.

பாமக தனித்துப் போட்டி? – அதிமுக கூட்டணியில் புதிய கட்சியா?

ராமதாஸின் மனநிலை என்பது இந்தக் குழப்பமான சூழலை வைத்து வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டைச் சாதித்துகொள்ள வேண்டும் என்பதே. இந்த ஆட்சி முடிய இன்னும் நான்கு மாதங்கள் முழுமையாக இருக்கின்றன. மத்திய அரசோடு இணக்கமாகவே இந்த அரசு இருக்கிறது. எனவே, இட ஒதுக்கீட்டைப் பெற்றுவிடலாம் அல்லது அதற்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று நினைக்கிறார் போல.

ஒருவேளை அது முடியாவிட்டால் வன்னியர்க்கு உள் ஒதுக்கீடு கொடுக்க வைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், ஒரு சாதிக்கு மட்டும் இடஒதுக்கீடு கொடுப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது. அதனால், இது இப்போதைக்கு முடிகிற விஷயமாக இல்லை என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. இரண்டில் ஒன்றுகூட கைக்கூடாத நிலையில் கூட்டணியில் நீடிக்க பாமக ஆர்வம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது.

பாமக தனித்துப் போட்டி? – அதிமுக கூட்டணியில் புதிய கட்சியா?

இந்தச் சட்டமன்ற தேர்தல் முடிவு இழுபறியாக இருக்கக்கூடும் என பாமக தரப்பு நினைக்கிறது. அப்போது நாம் தனித்து போட்டியிட்டு 20 – 30 எம்.எல்.ஏக்களைக் கையில் வைத்திருந்தால் பெரும் செல்வாக்கு செலுத்த முடியும். துணை முதல்வர் பதவி வரை கேட்க முடியும் எனக் கணக்குப் போடுவதாகச் செய்திகள் வருகின்றன. எனவே, 1996 ஆம் ஆண்டின் முடிவைப் போல 118 தொகுதிகளில் தனித்து நிற்கும் முடிவை நோக்கி பாமக செல்கிறது என்றும் பேசப்படுகிறது. ஆனால், அதிமுகவின் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளோமே என்று கேட்கும் பட்சத்தில் எங்களால்தான் சட்டமன்ற இடைத்தேர்தலில் பல தொகுதிகள் வென்றார்கள் என்று பதில் சொல்லலாம் என்று நினைக்கின்றனராம்.

பாமக தனித்துப் போட்டி? – அதிமுக கூட்டணியில் புதிய கட்சியா?

பாமக வெளியே செல்லும்பட்சத்தில் அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். ஏனெனில், அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு அடுத்து அதிக வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சி பாமகதான். ஆனால், திமுக கூட்டணியில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, அக்கட்சி அதிமுக பக்கம் சாயவும் வாய்ப்பிருக்கிறதாம். ஆனால், உதயசூரியன் சின்னத்தில் வென்ற எம்.பி பதவிக்கு ஆபத்து என்பதால் யோசனையில் உள்ளனராம். அதைக் காப்பாற்றும் வாக்குறுதி டெல்லியிலிருந்து வந்துவிட்டால் அணி மாறுதலுக்கு வாய்ப்பிருக்கிறதாம்.