“10.5% வன்னியர் இட ஒதுக்கீடு” ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி!

 

“10.5% வன்னியர்  இட ஒதுக்கீடு” ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த 8 ஆண்டுகளாக வன்னியர் சமூகத்திலிருந்து ஒரு உறுப்பினர் கூட இல்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீட்டை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்தார். இதனை தொட்ர்ந்து வன்னியர்கள் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டம் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது.இந்த ஒதுக்கீட்டை அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த ஆண்டு முதல் பின்பற்ற உயர்கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் இச்சட்டம் நிரந்தரமானது அல்ல என்ற தகவல் வெளியானது. இதை திமுக ஆட்சியில் தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் கூறியிருந்தார்.

“10.5% வன்னியர்  இட ஒதுக்கீடு” ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி!

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 11 உறுப்பினர் பதவிகள் பல ஆண்டுகளாக காலியாக கிடக்கின்றன. இத்தனை ஆண்டுகள், இத்தனை பதவிகள் காலியாக இருந்தும் கூட கடந்த 8 ஆண்டுகளாக வன்னியர் சமூகத்திலிருந்து ஒரு உறுப்பினர் கூட இல்லை.

வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் கோரியும் கிடைக்கவில்லை. 10.50% வன்னியர் இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு கூட அச்சமூக பிரதிநிதி இல்லை. வன்னியர்களுக்கு சமூகநீதி எவ்வாறு கிடைக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.