திமுக எம்.பி. ஆலையில் மர்ம மரணம் : எதிரிகள் கைது செய்யப்படுவார்களா? ராமதாஸ் கேள்வி!!

 

திமுக எம்.பி. ஆலையில் மர்ம மரணம் :  எதிரிகள் கைது செய்யப்படுவார்களா? ராமதாஸ் கேள்வி!!

பாமக நிர்வாகி கோவிந்தராசுவின் உடற்கூறாய்வை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது நிறைவளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. ஆலையில் மர்ம மரணம் :  எதிரிகள் கைது செய்யப்படுவார்களா? ராமதாஸ் கேள்வி!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி கோவிந்தராசு பணிக்கன்குப்பத்தில் உள்ள திமுகவைச் சேர்ந்த கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்திருக்கிறார்.இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கோவிந்தராசு உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்ததால் இந்த வழக்கில் காடாம்புலியூர் காவல் நிலையத்தில், டி.வி.ஆர் ரமேஷ் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டது.

திமுக எம்.பி. ஆலையில் மர்ம மரணம் :  எதிரிகள் கைது செய்யப்படுவார்களா? ராமதாஸ் கேள்வி!!

அத்துடன் கோவிந்தராசு அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதில் சம்பந்தப்பட்டவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால் கோவிந்தராசுவின் உடற்கூறாய்வு தமிழகத்துக்கு வெளியே புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கோவிந்தராசுவின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் குழு நாளை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்.பி. ஆலையில் மர்ம மரணம் :  எதிரிகள் கைது செய்யப்படுவார்களா? ராமதாஸ் கேள்வி!!

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பண்ருட்டி மேல்மாம்பட்டு பா.ம.க நிர்வாகி கோவிந்தராசுவின் உடற்கூறாய்வை புதுவை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது நிறைவளிக்கிறது!உடலை எக்ஸ்ரே எடுக்க வேண்டும், உடற்கூறாய்வை காணொலி பதிவு செய்ய வேண்டும், மூன்றாவது தரப்பு மருத்துவர் ஒருவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதன் மூலம் இந்த வழக்கில் நீதி நிலை நாட்டப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.நடந்தது கொலை தான் என்பதற்கான குறிப்புகள் முதல் தகவல் அறிக்கையில் இருக்கும் நிலையில் கொலை வழக்கு பதிவு செய்யாமல், சந்தேக மரணம் என பதிவு செய்திருப்பது குறித்து நீதிபதி அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதன்பிறகாவது கொலை வழக்காக மாற்றி எதிரிகள் கைது செய்யப்படுவரா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.