“விஞ்ஞானம்… விஞ்ஞானம்” – அமைச்சர் செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த ராமதாஸ்!

 

“விஞ்ஞானம்… விஞ்ஞானம்” – அமைச்சர் செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த ராமதாஸ்!

திமுகவிற்கும் மின்தடைக்கும் ஏழாம் பொருத்தம் தான் எப்போதும். மின்தடைக்கு திமுக கொடுத்த விலை ஐந்து வருட ஆட்சி என்று சொன்னால் அது மிகைப்படுத்தி சொல்வது போல் ஆகாது. அந்தளவிற்கு மக்கள் மீது திமுகவிற்கு அப்படியொரு கரும்புள்ளி இருக்கிறது. வேறு யாரை விடவும் மின்தடையின் வலி திமுகவிற்கு நன்றாகவே தெரியும். பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பிறகும் அதே மின்தடை திமுகவிற்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் வறுத்தெடுத்து வருகின்றன.

“விஞ்ஞானம்… விஞ்ஞானம்” – அமைச்சர் செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த ராமதாஸ்!

எல்லாவற்றிலும் சிக்ஸர் அடித்த தமிழ்நாடு அரசுக்கு யார்க்கர் போடுகிறது மின்தடை. இதற்கு முந்தைய அரசின் அலட்சியமே காரணம் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார். ஆனால் முன்னாள் அமைச்சர் தங்கமணி மறுப்பு தெரிவிக்கிறார். புனரமைப்பு பணிகள் முடிவடைந்து 10 நாட்களுக்குள் பிரச்சினைகள் களையப்படும் என செந்தில் பாலாஜி கூறியிருந்தார். ஆனால் இன்னமும் சரியாகவில்லை. இச்சூழலில் தற்போது புது காரணம் ஒன்றை அவர் கூறினார். அதாவது மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது என்றார்.

இந்த விளக்கத்தை பாமக நிறுவனர் விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி – விஞ்ஞானம்…. விஞ்ஞானம்!சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? சந்தேகம்” என குறிப்பிட்டுள்ளார்.