வன்னியர் இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் போராட்டம் : ரயில் மீது கற்களை வீசியதால் பதற்றம்!

 

வன்னியர் இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் போராட்டம் : ரயில் மீது கற்களை வீசியதால் பதற்றம்!

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பாமகவினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர்.

வன்னியர் இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் போராட்டம் : ரயில் மீது கற்களை வீசியதால் பதற்றம்!

எம்பிசி ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு கிடைத்த இடங்கள் எவ்வளவு என்பதை வெளியிட கூறியும், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரியும் பாமக கட்சி மற்றும் வன்னியர் சங்கம் அறவழிப் போராட்டத்தை நடத்த முடிவு எடுத்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் மீது ஏறி போராட்டம் நடத்த இவர்கள் முடிவெடுத்தனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாமகவினர் வாகனங்களில் சென்னையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பாமகவின் போராட்டத்திற்காக சென்னைக்கு வந்த பிற மாவட்ட பாமகவினர் பெருங்களத்தூர் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாமகவினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதை தொடர்ந்து அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அத்துடன் பெருங்களத்தூர் தடத்தில் சென்று கொண்டிருந்த ரயிலை மறித்து அதன் மீது கற்களை வீசி தகராறு செய்தனர்.இதன் காரணமாக சென்னைக்கு வரும் 8 நுழைவாயில்களிலும் 5000 போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.