நாளை முதல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்- பாமக

 

நாளை முதல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்- பாமக

நாளை முதல் கிராமப்புறங்களில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்த போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு கோரி சென்னையில் கடந்த ஒன்றாம் தேதி பாமகவினர் போராட்டம் நடத்தினர். மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை எல்லைக்குள் நுழைய முயன்ற பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலைமறியல், ரயில் மீது கல்வீச்சு என போராட்டம் தீவிரமடைந்தது.

நாளை முதல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்- பாமக

இந்நிலையில் சற்றுமுன் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரும் போராட்டம் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் பெற்றுள்ளது. . பிற சமுதாயங்களும், சமூகநீதி அமைப்புகளும் வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டு போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன். சென்னையில் நாளை (4ம்தேதி) முதல் நடைபெறவுள்ள போராட்டங்களைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 16,743 வருவாய் கிராமங்களை நிர்வகிக்கும் 12,621 கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன்பாகவும் வரும் 14-ஆம் தேதி வரை மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறவிருக்கிறது.

கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்புகள். எனவே, கிராமங்களில் நடத்தப்படவிருக்கும் இந்தப் போராட்டங்களைத் தான் மிகச்சிறந்த போராட்ட வடிவமாக நான் பார்க்கிறேன்.கிராமப்புறங்களில் நடைபெறவிருக்கும் இந்தப் போராட்டம் தான் நமது கோரிக்கைகளையும், அவற்றில் உள்ள நியாயங்களையும் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கொண்டு சென்று சேர்க்கும்…. சேர்க்க வேண்டும்…” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.