2000 ரூபாய் டோக்கனை கொடுத்து ஏமாற்றிய பாமக எம்.எல்.ஏ?

 

2000 ரூபாய் டோக்கனை கொடுத்து ஏமாற்றிய பாமக எம்.எல்.ஏ?

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக எம்.எல்.ஏ அருளை கண்டித்து தொகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாம்பழம் சின்னத்தில் வாக்களித்தால் 2000 ரூபாய் தருவதாக கூறி டோக்கன் வழங்கிவிட்டு தற்போது ஏமாற்றுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

2000 ரூபாய் டோக்கனை கொடுத்து ஏமாற்றிய பாமக எம்.எல்.ஏ?

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் அருள் ராமதாஸ், “பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் தொகுதிக்கு சென்று கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு செய்து முடிந்த அளவு உதவி செய்து வருகிறோம். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் வேண்டுமென்றே வாட்ஸ்அப்களில் பொய் தகவல்களை பரப்புகின்றனர். மாம்பழம் சின்னம் பொறித்த டோக்கனை கொடுத்து விட்டு 2 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்ததாக பரப்புகின்றனர். என் வெற்றியை பொறுக்க முடியாதவர்கள், இதுபோன்று பொய் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறேன்,இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்து இருக்கிறோம்” எனக் கூறினார்.