“இனிப்பு, புளிப்பு, கசப்பு கலந்த பட்ஜெட்” – ராமதாஸின் ஸ்வீட்டான வரவேற்பும் கசப்பான விமர்சனமும்!

“இனிப்பு, புளிப்பு, கசப்பு கலந்த பட்ஜெட்” – ராமதாஸின் ஸ்வீட்டான வரவேற்பும் கசப்பான விமர்சனமும்!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. ஊரக வேலை உறுதித்திட்டத்தின் அடிப்படையில் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை நூறிலிருந்து 150 ஆக உயர்த்தப்படும்; மகளிருக்கான பேறுகால விடுமுறை ஓராண்டாக அதிகரிக்கப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

“இனிப்பு, புளிப்பு, கசப்பு கலந்த பட்ஜெட்” – ராமதாஸின் ஸ்வீட்டான வரவேற்பும் கசப்பான விமர்சனமும்!

பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோரிக்கையான காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக முதல்வர் தலைமையில் ரூ.500 கோடியில் புதிய இயக்கம் உருவாக்கப்படும்; தமிழகத்தின் காடுகள் மற்றும் மரங்களின் அடர்த்தியை 33% ஆக உயர்த்தும் நோக்குடன் மிகப்பெரிய அளவில் மரம் வளர்க்கும் திட்டம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் மொழி, இலக்கியங்கள், தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றுக்காகவும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

“இனிப்பு, புளிப்பு, கசப்பு கலந்த பட்ஜெட்” – ராமதாஸின் ஸ்வீட்டான வரவேற்பும் கசப்பான விமர்சனமும்!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் மேலும் ரூ.2 குறைக்க வேண்டும்; விவசாயிகள் பயன்படுத்தும் டீசல் விலையையும் அரசு குறைக்க வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்குதல், காலியிடங்களை நிரப்புதல் மூலம் 5 லட்சம் பேருக்கு புதிதாக அரசுப் பணிகள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன; அவற்றை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

“இனிப்பு, புளிப்பு, கசப்பு கலந்த பட்ஜெட்” – ராமதாஸின் ஸ்வீட்டான வரவேற்பும் கசப்பான விமர்சனமும்!

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவை கலந்த கலவையாக உள்ளது. தமிழக அரசு எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிகளை புரிந்து கொள்ள முடிகிறது. இதே நிலை நீடித்தால் அதை மக்களால் தாங்க முடியாது. எனவே, நிதிச் சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொண்டு நிதிநிலைமையை சீர்செய்யவும், மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை விரைவாக செயல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.