பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி வெற்றி!

 

பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி வெற்றி!

தருமபுரி

பென்னாரகம் சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெற்றிபெற்றார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி தேர்தலில் அதிமுக கூட்டணயில் பாமக சார்பில் அந்த கட்சி தலைவர் ஜி.கே. மணி போட்டியிட்டார். திமுக சார்பில் இன்பசேகரன் போட்டியிட்டார்.

பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி வெற்றி!

வாக்கு எண்ணிக்கையின் போது திமுக – அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் அனைத்துச்சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில ஜி.கே.மணி, 21 ஆயிரத்து 186 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் இன்பசேகரனை வீழ்த்தி வாகை சூடினார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.