ஆளுநர் உரை… எதிர்க்கும் அதிமுக; வரவேற்கும் பாமக!

 

ஆளுநர் உரை… எதிர்க்கும் அதிமுக; வரவேற்கும் பாமக!

16வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன் படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையாற்றிய போது, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகள் பல்வேறு திட்டங்களை வெளியிட்டார்.

ஆளுநர் உரை… எதிர்க்கும் அதிமுக; வரவேற்கும் பாமக!

அவை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம் அளிப்பதாக கூறினார். பயிர் கடன், நகைக்கடன், விவசாயக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் உள்ளிட்ட எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை என கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமக ஆளுநர் உரையை வரவேற்றுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் ஜி.கே மணி, தொழில் சார்ந்த பெரு வழிச்சாலை திட்டங்களை வரவேற்கிறோம். அரசு பள்ளி, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம் என்று கூறினார். மேலும், ஆளுநர் உரையில் வரவேற்பும் ஏமாற்றமும் கலந்தே இருப்பதாக அவர் தெரிவித்தார்.