‘அன்புமணி முதல்வர்’ திட்டம் என்ன ஆனது?

 

‘அன்புமணி முதல்வர்’ திட்டம் என்ன ஆனது?

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக ,பாஜக ,தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகுதி பட்டியலும் ,வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தற்போது தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.

‘அன்புமணி முதல்வர்’ திட்டம் என்ன ஆனது?

இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி அளித்துள்ள பேட்டியில் , ‘பாமகவின் கோரிக்கையான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்டவை எங்களை மிகவும் கவர்ந்துள்ளது . அத்துடன் அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . நாங்கள் பெற்றுள்ள இட ஒதுக்கீடு போல எந்த சமுதாய மக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் சரியான ஒதுக்கீட்டை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதை தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.

‘அன்புமணி முதல்வர்’ திட்டம் என்ன ஆனது?

தொடர்ந்து பேசிய அவர் , “தமிழகத்தில் அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி அதிமுக . அடுத்த மூன்றாவது இடத்தில் பாமக உள்ளது . அதனால் அதிமுக ,பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணையும் போது மெகா வெற்றி கூட்டணியாக ஆக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று நாங்கள் கூறினோம் .ஆனால் தமிழகத்தில் இரண்டு கட்சிகள் தான் உள்ளது. அதனால் நல்ல கட்சி எது? நாட்டு மக்கள் விரும்பும் கட்சி எது என்று தெரிந்து கொண்ட பின்புதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்” என்று கூறிய அவரிடம் அன்புமணி முதல்வர் என்ற திட்டம் என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பிய போது, அது பாமக தனித்துப் போட்டியிட்ட போது அன்புமணியை நாங்கள் முதல்வராக நிறுத்தினோம். ஆனால் தற்போது கூட்டணியில் உள்ளதால் அது பற்றி பேசமுடியாது; பேசுவது சரியாக இருக்காது” என்றார்.