“மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறோம்”- பாமக நிறுவனர் ராமதாஸ்

 

“மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறோம்”- பாமக நிறுவனர் ராமதாஸ்

சட்டமன்ற தேர்தலில் மக்களின் தீர்ப்பை பாமக முழுமையாக ஏற்று கொள்வதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக 5 இடங்களில் வென்றுள்ளதாகவும், பாமகவுக்கும், அதிமுக கூட்டணிக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளித்தாலும், சோர்வை அளிக்கவில்லை என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

“மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறோம்”- பாமக நிறுவனர் ராமதாஸ்

மேலும், தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து சரிசெய்யவும், வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் கட்டமைப்புகளை வலுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள அவர், பாமக கடந்த காலங்களை போல ஆக்கப்பூர்வமான மக்கள் பணியை தொடரும் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும், களப்பணியாற்றிய அனைத்துக்கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார்