“அக்கவுண்டை முடக்கி விவசாயியின் உயிர் பறிப்பு” – வங்கியை கிழித்தெடுத்த ராமதாஸ்!

 

“அக்கவுண்டை முடக்கி விவசாயியின் உயிர் பறிப்பு” – வங்கியை கிழித்தெடுத்த ராமதாஸ்!

திருப்பூர் மாவட்டம் குள்ளம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி கனகராஜ் (53). கனகராஜின் தந்தை ரெங்கசாமி விவசாயத்திற்காக கேத்தனூரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ரூ.75 ஆயிரம் விவசாயக் கடன் பெற்றிருந்தார். ரெங்கசாமி 2017ஆம் ஆண்டில் உயிரிழந்ததையடுத்து, தந்தை பெற்ற கடனை திரும்ப செலுத்துவதாக கனகராஜ் வங்கியிடம் தெரிவித்திருந்தார்.

“அக்கவுண்டை முடக்கி விவசாயியின் உயிர் பறிப்பு” – வங்கியை கிழித்தெடுத்த ராமதாஸ்!

இந்த மாத ஆரம்பத்தில் கனகராஜ் சிறுநீரக சிகிச்சை தொடர்பாக மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அதே வங்கியில் உள்ள தனது கணக்கிலிருந்து பணம் எடுக்கச் சென்றார். அப்போது பணம் எடுக்க முடியாத வகையில், அவரது கணக்கு முடக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தனக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்குப் பணம் வேண்டும் என்று கேட்டு, வங்கி அதிகாரிகள் கறார் காட்டியிருக்கின்றனர். இதனால் சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் கனகராஜ் நேற்று முன்தினம் இறந்தார்.

“அக்கவுண்டை முடக்கி விவசாயியின் உயிர் பறிப்பு” – வங்கியை கிழித்தெடுத்த ராமதாஸ்!

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “திருப்பூர் மாவட்டம் குள்ளம்பாளையத்தில், தந்தை பெற்ற பயிர்க்கடனுக்காக, வங்கிக் கணக்கை பொதுத்துறை வங்கி முடக்கியதால், சிறுநீரக பாதிப்பு சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் கனகராஜ் என்ற ஏழை விவசாயி உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது!

கனகராஜின் மருத்துவச் செலவுகளுக்காக அவரது வங்கிக் கணக்கிலிருந்த 75,000 ரூபாயை எடுக்க அனுமதி கோரியும், அதை வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்தது மனிதநேயமற்ற செயலாகும். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்! விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைப்படி பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். உயிரிழந்த விவசாயி கனகராஜின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.