பாமக தனித்து போட்டி என அறிவிப்பு!

 

பாமக தனித்து போட்டி என அறிவிப்பு!

தமிழகத்தில் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக இருந்ததால் தான் பாமகவிற்கு முதலாவதாக அதிமுக தொகுதிகளை ஒதுக்கியது. பாஜகவைக் காட்டிலும் அதிகமாக 23 தொகுதிகளைப் பாமகவுக்கு ஒதுக்கியது. இதைக் கணக்கில் கொண்டு தான் வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு சட்டமும் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் செல்வாக்கு என்னவோ புதுச்சேரியில் அக்கட்சிக்கு கிடையாது. முதல்வர் நாற்காலியில் அமர்ந்த அதிமுகவுக்கே செல்வாக்கு குறைவு தான்.

பாமக தனித்து போட்டி என அறிவிப்பு!

இவர்களைத் தவிர்த்து துளியும் செல்வாக்கு இல்லாத ஒரு கட்சி என்றால் பாஜக தான். ஆனால் புதுச்சேரியில் பிரபலமான கட்சி போல் அதிகப்படியான இடங்களில் நிற்க பாஜக முயன்று வருவது ஆச்சரியத்தை அளிக்கிறது. என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தனக்கான 16 தொகுதிகளைப் பெற்றுவிட்டு அமைதியாகப் போய்விட்டார். மீதமிருக்கும் 14 தொகுதிகளுக்கு தான் அதிமுக, பாஜக, பாமக ஆகிய மூன்று கட்சிகளும் அடித்து மாய்கின்றனர்.

பாமக தனித்து போட்டி என அறிவிப்பு!

தற்போது நான்கு எம்எல்ஏக்களை கொண்டிருக்கும் அதிமுகவிற்கே மூன்று தொகுதிகள் தான் கொடுப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. பாமக நிலையெல்லாம் நினைத்துப் பாருங்கள். அதனால் தான் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட முடிவுசெய்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி பாமகவுக்கு இடம் ஒதுக்க முன்வராததால் இம்முடிவை அக்கட்சி எடுத்திருக்கிறது. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.