நீட் தேர்வு தற்கொலை… மாணவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவித்த பா.ம.க!

 

நீட் தேர்வு தற்கொலை… மாணவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவித்த பா.ம.க!

நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவன் குடும்பத்துக்கு பா.ம.க சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் விக்னேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான். தொடர்ந்து நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. அனிதா தொடங்கி பல உயிர்களை இழந்த நிலையிலும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என்று மத்திய அரசு உறுதியாக உள்ளது.

நீட் தேர்வு தற்கொலை… மாணவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவித்த பா.ம.க!


இந்த நிலையில் அரியலூரில் தற்கொலை செய்துகொண்ட மாணவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று பா.ம.க அறிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ம.க தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், “நீட் தேர்வால் பயன் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து அதை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இதற்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.
முன்னதாக விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ரூ.25 ஆயிரத்தை அவரது பெற்றோரிடம் வழங்கினார். இதைத் தொடர்ந்து ரூ.10 லட்சம் வழங்கப்படுவதாக பா.ம.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கோவையில் சுபஶ்ரீ என்ற மாணவி நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.