“சட்டையை கிழித்ததை தவிர ஸ்டாலின் வேறு எதையும் கிழிக்கவில்லை” அன்புமணி கடும் தாக்கு!!

 

“சட்டையை கிழித்ததை தவிர ஸ்டாலின் வேறு எதையும் கிழிக்கவில்லை” அன்புமணி கடும் தாக்கு!!

வன்னியர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு வழங்கி சட்டத்தை இயற்றிய முதல்வர் பழனிசாமியை மறக்கமாட்டோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

“சட்டையை கிழித்ததை தவிர ஸ்டாலின் வேறு எதையும் கிழிக்கவில்லை” அன்புமணி கடும் தாக்கு!!

அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக, பல ஆண்டு காலமாக வன்னியர்களுக்கு 20% உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என எண்ணி அதிமுக அரசு இதை கண்டு கொள்ளாமலேயே இருந்தது. தேர்தல் நெருக்கத்தில் பாமகவினர் களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இது அதிமுக – பாமக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டது.இதையடுத்து, பாமகவை தனது கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்ட அதிமுக அரசு வன்னியர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு வழங்கி சட்டத்தை இயற்றியது.

“சட்டையை கிழித்ததை தவிர ஸ்டாலின் வேறு எதையும் கிழிக்கவில்லை” அன்புமணி கடும் தாக்கு!!

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் முரளியை ஆதரித்து அக்கட்சியின் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ ஸ்டாலின் அரசியலை வியாபாரமாக நினைத்து செய்துகொண்டிருக்கிறார். என்னுடைய அரசியல் சேவை புனிதமான சேவை. நான் மக்கள் முன்னேற்றத்துக்காக அரசியலுக்குள் வந்தேன். ஸ்டாலின் குடும்பத்திற்காக வந்தார். அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கூட சரியாக செயல்படவில்லை. சட்டமன்றத்தில் சட்டையை கிழித்ததை தவிர ஸ்டாலின் வேறு எதையும் கிழிக்கவில்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தின் முதல்வராக மீண்டும் ஒரு விவசாயி தான் வர வேண்டும். முதல்வர் பழனிசாமி தமிழக மக்களுக்கு நல்லாட்சியை தருகிறார். 40 ஆண்டுகால போராட்டம், 21 பேரின் உயிர்த்தியாகத்தால் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கிடைத்துள்ளது . அதை எங்களுக்கு பெற்று தந்த முதல்வர் பழனிசாமியை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என்றார்.