வன்னியர்கள் இட ஒதுக்கீட்டில் இழுபறி! கூட்டணியில் விரிசல்?

 

வன்னியர்கள் இட ஒதுக்கீட்டில் இழுபறி! கூட்டணியில் விரிசல்?

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க நிபந்தனை விதித்துள்ளது. அதில், வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாமக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களாக அமைச்சர்கள், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசி வருகின்றனர். இருப்பினும் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்று தெரிகிறது.

வன்னியர்கள் இட ஒதுக்கீட்டில் இழுபறி! கூட்டணியில் விரிசல்?

இட ஒதுக்கீட்டுக்கு ஒரு முடிவு தெரிந்தால்தான் கூட்டணி பற்றி பேசுவோம் என்று உறுதியாக இருந்த பாமக நிறுவனர் ராமதாசை நேற்று மாலை சந்திக்கவிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்திப்பை ரத்து செய்துவிட்டு அமைதி காத்துவிட்டார். வழக்கம்போல் தனது பரப்புரையையும், பணிகளையும் நடத்திவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுவரை கூட்டணி குறித்து வாய்திறக்கவில்லை. பாமக மட்டுமல்ல தேமுதிக உள்ளிட்ட எந்த கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக நடத்தவிலை.

இந்நிலையில் இட ஒதுக்கீடு தொடர்பாக நேற்று அமைச்சர்களுடன் பாமக குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 10.5 % உள் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அளிக்க முன் வந்தாலும், அதனை மருத்துவர் இராமதாசு ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது. எனவே, இழுபறி நீடிக்குதுன்னு தகவல்கள் த்ரிவிக்கின்றன.