பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக?

 

பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக?

வரும் 27ம் தேதி அதிமுகவின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாமகவுக்கு அழைப்பு விடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக – பாமக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமகவிற்கு எத்தனை தொகுதிகள்-எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசனை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர், பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரத்தில் சந்திக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது குறிப்பிடதக்கது.

பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக?

அண்மையில் பாமக அதிமுகவுக்கு எதிராக வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கல்வி, வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரியும் போராட்டங்களை முன்னெடுத்தது குறிப்பிடதக்கது. பாமகவினர் சாலைமறியல், ரயில் மீது கல்வீச்சு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாமக ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைபாட்டில் இருப்பதாக சொல்லப்பட்டது.