மக்களுக்கு பொருந்தும் கோவிட்-19 விதிமுறைகள் மத்திய அமைச்சர்களுக்கும் பொருந்தும்…. குட்டு வைத்த பிரதமர் மோடி

மக்களுக்கு பொருந்தும் கோவிட்-19 விதிமுறைகள் மத்திய அமைச்சர்களுக்கும் பொருந்தும்…. குட்டு வைத்த பிரதமர் மோடி

கோவிட்-19 விதிமுறை மீறலுக்கு பல மத்திய அமைச்சர்கள் விலக்கு கோரி வரும் நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி இது தொடர்பாக வெளிப்படையாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மத்திய ரசாயன மற்றும் உர துறை அமைச்சர் சதானந்த் கவுடா பெங்களூரு சென்று மக்களை சந்தித்தது தனிமைப்படுத்தலை மீறுவதாகும்.

மக்களுக்கு பொருந்தும் கோவிட்-19 விதிமுறைகள் மத்திய அமைச்சர்களுக்கும் பொருந்தும்…. குட்டு வைத்த பிரதமர் மோடி

சாமானிய மக்களுக்கு பொருந்தும் கோவிட்-19 தொடர்பான விதிமுறைகள் மத்திய அமைச்சர்களுக்கும் பொருந்தும். நாம் பணி காரணமாக மக்களை சந்திக்க வேண்டியது இருக்கும். ஆனால் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும். உத்தரகாண்டில் மாவட்ட நிர்வாகத்தின் தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறியதாக அம்மாநில சுற்றுலா துறை அமைச்சர் சாட்பால் மகராஜ் மீது குற்றச்சாட்டப்பட்டது.

மக்களுக்கு பொருந்தும் கோவிட்-19 விதிமுறைகள் மத்திய அமைச்சர்களுக்கும் பொருந்தும்…. குட்டு வைத்த பிரதமர் மோடி

அதற்கு அடுத்த சில நாட்களில் அவருக்கும், அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் உறுதியானது. அதனால் மத்திய அமைச்சர்கள் அனைவரும் கவனமாக இருங்க. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த வாரம் சதானந்த் கவுடா பெங்களூரு வந்த போது கர்நாடக அரசின் கட்டாய தனிமைப்படுத்துதல் விதிமுறையை பின்பற்றவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு நான் மத்திய அமைச்சர் என்பதால் தனக்கு விதிமுறையில் விலக்கு உண்டு தெரிவித்தார். அப்போது அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் தற்போது சதானந்த் கவுடா வீட்டில் தன்னை தனிமைப்படுத்தியுள்ளதாக தகவல்.