darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்- பிரதமர் மோடி அதிரடி

PM Modi
PM Modi

நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 

அப்போது பேசிய அவர், ”காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு. 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் படேல், வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது. 370 பிரிவு காஷ்மீரின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. 370 சட்டம் ரத்து செய்யப்பட்டதால் பட்டியல் இன, பழங்குடி இன மக்களின் உரிமைக்கள் நிலைநாட்டப்படும்


காஷ்மீர் மக்களுக்கு இனி வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள், பெண்களுக்கு கல்வி, மருத்துவ வசதி, ஓய்வூத்யம் உள்ளிட்ட வசதிகள் தடையின்றி கிடைக்கும். காங்கிரஸ் சட்டங்களால் காஷ்மீர் பகுதியில் ஒரு சாரார் மட்டுமே பயனடைந்து வந்தனர். பிரதமரின் கல்வி உதவித்தொகை காஷ்மீரில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும். காஷ்மீரில் இதுவரை 42000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் கேட்கவில்லை.

ஆளுநர் ஆட்சியால் காஷ்மீரில் சிறப்பாக வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும். ஜம்மு காஷ்மீரை  யூனியன் பிரதேசமாக அறிவித்திருப்பது தற்காலிகமானதே... மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். ஜம்மு காஷ்மீரில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும். நீண்ட நாள் ஆய்வுக்கு பிறகு சட்டப்பிரிவு 370 ஐ நீக்குவது என்ற முடிவை எடுத்தோம். 


காஷ்மீர் மற்றும் லடாக் உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தளமாக மாற்றப்படும். நான் அண்மையில் காஷ்மீர் சென்றபோது அங்கு மின்சாரம், சாலை வசதிகள் மேம்பட்டிருப்பதை கண்டேன்" என்று கூறினார்.

2018 TopTamilNews. All rights reserved.