“விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த, பிரதமர் முன்வர வேண்டும் ” – அனைத்துக் கட்சி சார்பில் வலியுறுத்தல்!

 

“விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த, பிரதமர் முன்வர வேண்டும் ” – அனைத்துக் கட்சி சார்பில் வலியுறுத்தல்!

டெல்லியில், போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என அனைத்துக் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து, டெல்லியில், ஜனநாயக வழிமுறைகள்படி வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். பல லட்சம் விவசாயப் பெருமக்கள் கடந்த நான்கு நாட்களாக கூடியுள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனை விதிக்கும் சர்வாதிகார மனப்பான்மை கொண்ட மத்திய பா.ஜ.க அரசுக்கு, கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

“விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த, பிரதமர் முன்வர வேண்டும் ” – அனைத்துக் கட்சி சார்பில் வலியுறுத்தல்!

அந்த அறிக்கையில், “குறைந்தபட்ச ஆதார விலை”என்பதை தவிர்த்துவிட்டு இயற்றப்பட்ட வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் எதிர்காலத்தை இருளடையச் செய்து விடும் என்றும், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் கொண்டு வந்தது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளனர். வேளாண்மையின் உயிர் நாடியாக இருக்கும் இலவச மின்சாரத்தை பறிக்க வஞ்சகமாகத் மத்திய அரசு திட்டமிகிறது, “குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லை”; “விவசாய மண்டிகள் இல்லை”; “இலவச மின்சாரம் இல்லை”என்று அடுக்கடுக்கான துரோகத்தைச் செய்து, விவசாயப் பெருமக்களின் கண்ணிரண்டையும் பிடுங்கிக் கொள்ளும் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், “புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் புதிய உரிமைகளை அளித்துள்ளது”என “மன் கி பாத்”உரையில் பிரதமர் மோடி பேசியிருப்பது, விவசாயிகள் போராட்டத்தை அவமதிப்பதாகவும், எள்ளி நகையாடுவதாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

“விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த, பிரதமர் முன்வர வேண்டும் ” – அனைத்துக் கட்சி சார்பில் வலியுறுத்தல்!

போராடும் விவசாயிகளை சந்தித்துப் பேசி, பிரச்சினைகளுக்குச் சுமுகமான முறையில் தீர்வு காண, பிரதமர் முன்வரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. “பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை”; “ போராடும் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு”; “போலீஸ் தடியடி”; “டெல்லிக்கு வரும் விவசாயிகளை, ஜந்தர் மந்தரில் இடம் தருகிறோம் என்று பொய் சொல்லி, வேறு மைதானத்திற்குக் கொண்டு போய் அடைப்பது”; என்று ஜனநாயகத்தின் மீது எள்ளளவும் அக்கறையின்றி மத்திய அரசு நடந்து கொள்வது கடும் கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளனர். விவசாயிகள் நடத்திவரும் போராட்டம், வாழ்வுரிமைப் போராட்டம்! அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை! “குறைந்தபட்ச ஆதாரவிலை”என்பது வேளாண்மையின் முதுகெலும்பு; வேளாண் வளர்ச்சிக்கான வித்து. அதை நசுக்கி முறித்திடும் வகையிலேதான், இந்த மூன்று வேளாண் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே விவசாயிகளின் போராட்டத்திற்கு மதிப்பளித்து , மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

“விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த, பிரதமர் முன்வர வேண்டும் ” – அனைத்துக் கட்சி சார்பில் வலியுறுத்தல்!

இந்த அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.