‘பட்ஜெட்டின் இதயமே விவசாயிகளுக்கான திட்டம் தான்’ – பிரதமர் மோடி புகழாரம்!

‘பட்ஜெட்டின் இதயமே விவசாயிகளுக்கான திட்டம் தான்’ – பிரதமர் மோடி புகழாரம்!

நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். சுகாதாரம், விவசாயம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கான திட்டத்தை அறிவித்தார். இச்சூழலில் பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி பேசியுள்ளார். அவர் “மிகவும் செயல்திறன் மிக்க பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்திருக்கிறார். பட்ஜெட்டின் இதயமே விவசாயிகளுக்கும் கிராமத்தில் வசிப்பவர்களுக்கும் அறிவித்த திட்டங்கள் தான். இந்த பட்ஜெட் நாட்டின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. உத்வேகம் அளித்திருக்கிறது.

‘பட்ஜெட்டின் இதயமே விவசாயிகளுக்கான திட்டம் தான்’ – பிரதமர் மோடி புகழாரம்!

விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது. இதற்காக பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விவசாயிகள் எளிதாக கடன் பெற முடியும். வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் உதவியுடன் ஏபிஎம்சி சந்தைகளை வலுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன தனி நபர்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளுக்கு பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும்” என்றார்.

‘பட்ஜெட்டின் இதயமே விவசாயிகளுக்கான திட்டம் தான்’ – பிரதமர் மோடி புகழாரம்!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றும் வரும் சூழலில், பிரதமர் மோடி விவசாயிகளின் நலன் தான் பட்ஜெட்டின் இதயம் என்று கூறியிருப்பது நகைமுரணாக இருக்கிறது.