நீர் மேலாண்மை திட்டத்தில் தமிழகம் முதலிடம் : முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

 

நீர் மேலாண்மை திட்டத்தில் தமிழகம் முதலிடம் : முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

கோவையில் நடைபெறவிருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்திருக்கிறார். வழி நெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு பலத்த வரவேற்பு அளித்தனர். கொடிசியா அரங்கிற்கு காரில் அவர் வரும் போது தொண்டர்கள் எழுப்பிய கோஷம் ஆர்ப்பரித்தது. அரசு விழா நடைபெறும் கொடிசியா அரங்கிற்கு வந்த பிரதமர் மோடியை, முதல்வர் ஈபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் வரவேற்றனர். அவருக்கு நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினர்.

நீர் மேலாண்மை திட்டத்தில் தமிழகம் முதலிடம் : முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ், எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடியை உளமார வரவேற்கிறேன் என்று கூறி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, பல்வேறு திட்டங்களை தொடக்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி வருகை தந்திருக்கிறார். எனது அழைப்பின் பேரில் கடந்த 14ம் தேதி அவர் சென்னை வந்திருந்தார். வரலாற்று சிறப்பு மிக்க குடிமராத்து திட்டம், காவிரி டெல்டா திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு தொடங்கவிருக்கும் பல திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார் என்று கூறினார்.

தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு புரியும் வகையில் அவர் தொடக்கி வைக்கவிருக்கும் அனைத்து திட்டங்களையும் ஆங்கிலத்தில் கூறினார் முதல்வர் பழனிசாமி. நீர் மேலாண்மை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.