இந்தியாவுல ஃபர்ஸ்ட்.. வேர்ல்டுல 11ஆவது – உலகளவில் டிரெண்டாகி மாஸ் காட்டும் பிரதமர் மோடி!

 

இந்தியாவுல ஃபர்ஸ்ட்.. வேர்ல்டுல 11ஆவது – உலகளவில் டிரெண்டாகி மாஸ் காட்டும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி அனைத்துவிதமான ஊடக வழியாகவும் நாட்டு மக்களிடம் தொடர்பில் இருந்துகொண்டே இருப்பார். சொல்லப்போனால் அதுதான் அவரின் பலமும் கூட. மன்கி பாத் மூலம் வானொலியில் உரையாடுவார். அந்த நிகழ்ச்சி யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ஒளிப்பரப்பாகும். ஒவ்வொரு நிகழ்வுகளை அப்டேட் செய்வது, அரசியல் கட்சித் தலைவர்களும் உலக தலைவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறுவது என எப்போதுமே செம ஆக்டிவாக அவரது ட்விட்டர் ஐடி இருக்கும். திடீரென்று ட்விட்டரில் மக்களின் கேள்விக்கு பதில் சொல்வார்.

இந்தியாவுல ஃபர்ஸ்ட்.. வேர்ல்டுல 11ஆவது – உலகளவில் டிரெண்டாகி மாஸ் காட்டும் பிரதமர் மோடி!

இதனால் அவரின் ட்விட்டரில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே சென்றது. 2009ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சரான சமயம் ட்விட்டர் கணக்கை தொடங்கினார். 2010ஆம் ஆண்டு 1 லட்சம் பாலோயர்களைப் பெற்றார். படிப்படியாக உயர்ந்து 2020ஆம் ஆண்டு ஜூலையில் பாலோயர்களின் எண்ணிக்கை 6 கோடியைக் கடந்தது. இச்சூழலில் பிரதமர் மோடியை ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை தற்போது 7 கோடியைத் தாண்டியுள்ளது.

இந்தியாவுல ஃபர்ஸ்ட்.. வேர்ல்டுல 11ஆவது – உலகளவில் டிரெண்டாகி மாஸ் காட்டும் பிரதமர் மோடி!

இதற்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக நெட்டிசன்கள் #CongratsModiJiFor70M என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். உலகளவில் ட்விட்டரில் அதிகமாக பின்தொடர்பவர்கள் பிரதமர் மோடி 11ஆவது இடத்தில் இருக்கிறார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 12.98 கோடி பாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தியளவில் மோடி முதலிடத்தில் இருக்கிறார். இதற்கு முன்னதாக மோடிக்கு டிரம்ப் (8.8 கோடி) டஃப் கொடுத்தார். ஆனால் அவரின் கணக்கு முடக்கப்பட்டதால், இப்போது அதிக பாலோயர்கள் கொண்ட ஆக்டிவ் அரசியல்வாதியாக பிரதமர் மோடி மட்டும் தான் இருக்கிறார்.